தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம் என்று நம் வேதம், சாஸ்திரங்களும், புராணங்களும், ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன. மனிதனின் அன்றாட செயல்திட்டங்களில் அதிதிகளுக்கும், தன்னைச் சார்ந்தவர்க்ளுக்கும், தன்னிடம் பணிபுரிபவர்களுக்கும் உணவு அளித்து விட்டேதான் உண்ணவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மனிதாபிமானம் கொண்டு உருவான முறை ஆகும்.
மக்கள் எல்லோருமே குறிப்பாக ஏழைகள் வருந்தாமல் வாழ வேண்டும் என்ற பெரும் நோக்குடன் கருணை உள்ளம் கொண்டு அல்லும் பகலும் உலக க்ஷேமத்தையே மனதில் நினைத்துவரும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீபரமாசார்யாள் 25 ஆண்டுகளுக்கு முன்பே “பிடிஅரிசிதிட்டம்” என்பதை அநுக்ரஹித்தார்கள். இதன்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாடம் சமையல் செய்ய துவங்கும்போது ஒருபிடி அரிசியையும் ஒரு நயா பைசாவையும் ஒரு பானையில் போட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் சமூக சேவகர்கள் இவைகளை சேகரித்து எடுத்துச் சென்று சமையல் செய்து அருகில் உள்ள ஒரு ஆலயத்தில் பகவானுக்கு அர்ப்பணித்துவிட்டு பட்டைபோட்டு பத்துபைசா பெற்றுக் கொண்டு ஏழைகளுக்கு அந்த அன்னத்தை விநியோகிக்கவேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம்.
இதை பெரிய சுமையாக மக்கள் கருதமாட்டார்கள். தன்னலம் கருதாது மக்களின் துயர் துடைக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.
Kandhamangalam is a village near Komal in Kuttalam Taluk in Nagapattinam District of Tamilnadu State, India.It is about 15 Kms from Mayiladuthurai and is located in the banks of Veeracholan river alias Kalyana Cauvery.Thiruvarur, Sirkazhi, Therizhandur (birth place of Tamil poet Kambar), Vaitheeswaran koil are some of the nearby places from Kandhamangalam.